திருச்சி:காவிரி ஆற்றில் குளித்த மூவர் தண்ணீரில் மூழ்கினர். இதில் கல்லுாரி உதவி பேராசிரியர் உடல் மீட்கப்பட்டது. இரு சிறுவர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 53. இவரது வீட்டுக்கு, கோவையை சேர்ந்த உறவினர்கள் சரவண குமார், 31, அவரது மனைவி மற்றும் கரூரை சேர்ந்த, ரகுராமன் அவரது மனைவி மற்றும் மகன்கள் ரத்திஷ், 12, மிதுன், 8, வந்தனர்.
நேற்று மாலை, 3.30 மணியளவில் முசிறி காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, சரவணகுமார், ரத்திஷ், மிதுன் ஆகியோர் புதைமணலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். தீயணைப்பு வீரர்கள், முசிறி போலீசார், தேடினர். சரவணன் உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்கப்பட்டது.
ஆனால் அது ரத்திஷ், மிதுன் உடல் இல்லை என்பதால், அதிர்ச்சி அடைந்தனர். அவர் முசிறி அசோக்குமார் மகன் பார்த்திபன், 12 என்பது தெரிந்தது. சிறுவன் ரேஷன் கடைக்கு செல்வதாக கூறி வந்து, ஆற்றில் குளிக்கும் போது மூழ்கி இறந்துள்ளார்.பலியான, சரவணகுமார், கோவை தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். ரத்தீஷ், மிதுன் கரூர் தனியார் மெட்ரிக்., பள்ளியில் முறையே, 7 மற்றும், 3ம் வகுப்பு படித்தனர். தொடர்ந்து சிறுவர்களை மீட்பு பணியினர் தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE