திருப்பூர்:ஊராட்சிகளின் குப்பை பிரச்னைக்கு தீர்வுகாண 'பேட்டரி' வாகனம் வழங்கியும், 'டிரைவர்' இல்லாமல், அழகான வாகனங்கள் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டுள்ளன.துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமங்களின் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக, 'பேட்டரி' பொருத்திய ஆட்டோ போன்ற வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், மூன்று முதல், எட்டு வாகனங்கள் வீதம், 121 ஊராட்சிகளுக்கு, 280 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.'டூ வீலர்' போன்ற வடிவத்துடன், சிறிய ஆட்டோ போல், வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமத்தில் சேரும் குப்பையை, உடனுக்குடன், வேறு பகுதிக்கு கடத்த, இவ்வாகனம் மிகவும் உதவியாக இருக்கிறது.வாகனம் வழங்கிய அதிகாரிகள், வாகனத்தை இயக்க 'டிரைவர்' ஏற்பாடு செய்யவில்லை. குப்பை சேகரிக்கும் பெண்கள், இவ்வாகனத்தை இயக்க முடியாததால், வாகனம் ஓரம்கட்டப்பட்டுள்ளது. தன்னார்வலர் அல்லது ஊராட்சி துப்புரவு பணியாளரை கொண்டு, வாகனம் இயக்கப்படுகிறது.துாய்மை காவலர்கள் கூறியதாவது:'பேட்டரி' வாகனத்தை, துாய்மை காவலர்கள் மட்டும் இயக்க வேண்டுமென கூறுகின்றனர். ஆனால், வயதான பெண்கள், ஆண்கள் தான் பணியில் இருக்கிறோம். எங்களுக்கு, நுாறு ரூபாய் தினக்கூலி வழங்கப்படுகிறது; 250 ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.குப்பை வாகனம் வழங்கியது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதற்கான 'டிரைவர்' வசதியில்லை. குப்பையை அப்புறப்படுத்த, சிறப்பு ஊதியத்தில், 'டிரைவர்'களை நியமிக்க வேண்டும். மாதம், 2,500 ரூபாய் சம்பளத்தில், குப்பை வாகனத்தை இயக்க யாரும் வருவதில்லை; மாதம், டிரைவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், ஊழியருக்கு, மாதம், 5000 ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE