பொது செய்தி

தமிழ்நாடு

'கடைமடைக்கு தடையின்றி தண்ணீர் வேண்டும்!' பி.ஏ.பி., விவசாயிகள் வேண்டுகோள்

Added : நவ 18, 2020
Share
Advertisement
திருப்பூர்;நீர் நிர்வாக ஊழலை தடுத்து, கடைமடை பகுதிக்கு, தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமென, வெள்ளகோவில் பி.ஏ.பி., விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.பி.ஏ.பி., பாசன திட்டத்தில், வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு, ஏழு நாள் இடைவெளியில், இரண்டு சுற்று தண்ணீர் வழங்க வேண்டும்.மாறாக, 14 நாட்களுக்கு பதிலாக, மூன்று நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. விவசாயத்துக்கு
 'கடைமடைக்கு தடையின்றி தண்ணீர் வேண்டும்!' பி.ஏ.பி., விவசாயிகள் வேண்டுகோள்

திருப்பூர்;நீர் நிர்வாக ஊழலை தடுத்து, கடைமடை பகுதிக்கு, தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமென, வெள்ளகோவில் பி.ஏ.பி., விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.பி.ஏ.பி., பாசன திட்டத்தில், வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு, ஏழு நாள் இடைவெளியில், இரண்டு சுற்று தண்ணீர் வழங்க வேண்டும்.மாறாக, 14 நாட்களுக்கு பதிலாக, மூன்று நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. விவசாயத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, கால்நடைகளின் தண்ணீர் தடையை கூட சரிசெய்ய முடிவதில்லை.மண் வாய்க்காலாக இருந்த போது, முறையாக கிடைத்த தண்ணீர், கான்கிரீட் கால்வாயாக மாற்றிய பின் கிடைப்பதில்லை. வெள்ளகோவில் கால்வாயில், சமச்சீர் பாசனம் கடைபிடிக்கப்படுவதில்லை; விளை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:உடுமலை- பொங்கலுார் வாய்க்காலையும், காங்கயம் - வெள்ளகோவில் கால்வாயையும் நேரில் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுத்து, ஏழு நாள் இடைவெளியில், 14 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். வெள்ளகோவில் பகுதிக்கு, 135 நாட்கள் வீதம் பாசன தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டுமென கூறி, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X