பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே கிராமத்தில், 23 அறங்காவலர் தொய்வின்றி தொடரும் பசுமை பணி

Added : நவ 18, 2020
Share
Advertisement
பல்லடம்:பசுமையை காக்கும் முயற்சியாக, ஒரே கிராமத்தை சேர்ந்த, 23 பேர் வனம் அமைப்பின் அறங்காவலர்களாக இணைந்தனர்.வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜன் கூறியதாவது:மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், சென்னை சில்க்ஸ் நிறுவனர் ஆறுமுகம் உட்பட
 ஒரே கிராமத்தில், 23 அறங்காவலர்  தொய்வின்றி தொடரும் பசுமை பணி

பல்லடம்:பசுமையை காக்கும் முயற்சியாக, ஒரே கிராமத்தை சேர்ந்த, 23 பேர் வனம் அமைப்பின் அறங்காவலர்களாக இணைந்தனர்.வனம் அமைப்பின் செயலாளர் சுந்தரராஜன் கூறியதாவது:மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், சென்னை சில்க்ஸ் நிறுவனர் ஆறுமுகம் உட்பட திருப்பூரை சேர்ந்த பல்வேறு முன்னணி தொழில் முனைவோர், அறங்காவலர்களாக உள்ளனர்.தற்போது, காளிவேலம்பட்டியை சேர்ந்த, 23 பேர் நேற்று ஒரே நாளில் அறங்காவலர்களாக இணைந்தனர். இதனால், அறங்காவலர்களின் எண்ணிக்கை, 433ஆக உயர்ந்ததுஇவ்வாறு, அவர் கூறினார்.பொருளாளர் விஸ்வநாதன் தலைமையில், அறங்காவலர்கள் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. வனம் தலைவர் சின்னசாமி, செயல் தலைவர் பாலசுப்ரமணியன், மற்றும் அறங்காவலர்கள் ஈஸ்வரன், பரமசிவம் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X