கடலுார் : வரும் 2021ம் ஆண்டின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழக முதல்வர் குடியரசு தின விழாவின்போது, மற்றவர் உயிர், அரசின் சொத்துக்களை காப்பாற்றுவதில் துணிச்சலாகவும், தெளிவாகவும் செயல்புரிந்த பொது மக்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு, அண்ணா பதக்கம் வழங்கி கவுரவிப்பதாக பேசினார்.
அதையொட்டி கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் இருப்பின் இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை http://awards.tn.gov.in.ல் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினையும், தான் செய்த செயலின் அறிக்கையினை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து, தகுந்த ஆதாரங்களுடன் 3 நகல்களில் கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு நாளைக்குள் (19ம் தேதி) கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும்.
மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017-03495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE