நெல்லிக்குப்பம் : தொடர்ந்து மழை பெய்வதால் பழமையான வீடுகளில் தங்க வேண்டாமென நெல்லிக்குப்பம், தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு; நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல ஆண்டுகள் பழமையான வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், பழமையான வீடுகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பு கருதி தங்கள் வீடுகளை காலி செய்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
மழை காலம் முடிந்த பிறகு தங்கள் வீடுகளுக்கு திரும்புவதன் மூலம் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். தண்ணீர் செல்லும் ஆற்றிலோ வாய்க்காலிலோ குளிப்பதையும் கடந்து செல்வதையும், செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரால் பிரச்னை என்றால் 24 மணி நேரமும் தீயணைப்பு நிலையத்தை 04142 272399 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE