பொது செய்தி

தமிழ்நாடு

வெண்கரும்பூர் புதுகாலனியில் வடிகால் அமைக்க கோரிக்கை

Added : நவ 18, 2020
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் புதுகாலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழை நீர் தெருவில் குளம்போல் தேங்கி நிற்பதால் இப்பகுதி மக்கள் தெருவில் நடந்து செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.வடிகால் வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் புதுகாலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழை நீர் தெருவில் குளம்போல் தேங்கி நிற்பதால் இப்பகுதி மக்கள் தெருவில் நடந்து செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

வடிகால் வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று பெய்த கன மழை காரணமாக தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே, வெண்கரும்பூர் புதுகாலனியில் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X