குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டியில் சுற்றுச் சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் உள்ள, குறிஞ்சிப்பாடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அகதிகள் முகாம் உள்ளது. மார்க்கெட் கமிட்டியும், அகதிகள் முகாமும் ஒரே இடத்தில் மதில் சுவர் இல்லாமல் உள்ளதால் பல பிரச்னைகள்ஏற்படுகின்றன.முகாமில் தங்கி உள்ளோரும், கமிட்டிக்கு வருவோரும் ஒரே வழியை பயன்படுத்துவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கமிட்டிக்கு சுற்றுச் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE