பொது செய்தி

தமிழ்நாடு

தாழ்வான பகுதியில் வசித்தவர்கள் முகாமில் தங்க வைப்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் தாழ்வான பகுதியில் வசித்த 8 குடும்பத்தினர், முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.தொடர் மழை காரணமாக கடலுாரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறுகள், வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் கடலூர் கோண்டூர் மாசிலாமணி நகரில் தாழ்வான பகுதியில் வசித்து வந்த 8 குடும்பத்தினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

கடலுார் : கடலுாரில் தாழ்வான பகுதியில் வசித்த 8 குடும்பத்தினர், முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர் மழை காரணமாக கடலுாரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறுகள், வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் கடலூர் கோண்டூர் மாசிலாமணி நகரில் தாழ்வான பகுதியில் வசித்து வந்த 8 குடும்பத்தினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோண்டூர் தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீராம் மற்றும் அதிகாரி உணவு வழங்கினர்.நேற்று காலை கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன் ஆகியோர் முகாமிற்கு வந்து, அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என, கேட்டறிந்தனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X