பொது செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

Added : நவ 18, 2020
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு ஆய்வு செய்தார்.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி த.வா.க., சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து திட்டக்குடி தாசில்தார் சையது அபுதாகீர் தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தி, பிரச்னைக்கு தீர்வு

திட்டக்குடி : திட்டக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு ஆய்வு செய்தார்.

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை குறைபாடுகளை சரிசெய்ய வலியுறுத்தி த.வா.க., சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து திட்டக்குடி தாசில்தார் சையது அபுதாகீர் தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண உறுதி அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கடலுார் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

தலைமை மருத்துவ அலுவலர் (பொ) செல்வேந்திரன், த.வா.க., ஒன்றிய செயலர் சுரேந்தர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.பின்னர், இணை இயக்குனர் நிருபர்களிடம் கூறுகையில், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு, சிகிச்சை, படுக்கைவசதிகளை படிப்படியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இல்லாத வசதிகளை அரசிடமிருந்து பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஊசி, மாத்திரை வழங்கவோ, பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்டால் தலைமை மருத்துவ அலுவலரிடம் புகார் செய்யலாம். பொதுமக்கள் டாக்டர்கள், ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X