அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அழகிரி வந்தால் முழுமனதுடன் வரவேற்போம்'

Updated : நவ 19, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் முருகன் நடத்தும் வேல் யாத்திரை, டிச., 7ம் தேதி நிறைவடையும் வகையில், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இம்மாதம், 6ம் தேதி, திருத்தணியில் வேல் யாத்திரையை, முருகன் துவக்கினார். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, டிச., 6ம் தேதி, திருச்செந்துாரில் யாத்திரையை நிறைவு செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.தமிழக அரசு, வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை. எனினும்,
அழகிரி, முருகன், பாஜ

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் முருகன் நடத்தும் வேல் யாத்திரை, டிச., 7ம் தேதி நிறைவடையும் வகையில், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம், 6ம் தேதி, திருத்தணியில் வேல் யாத்திரையை, முருகன் துவக்கினார். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, டிச., 6ம் தேதி, திருச்செந்துாரில் யாத்திரையை நிறைவு செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.தமிழக அரசு, வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை. எனினும், தடையை மீறி முருகன் தலைமையில், பா.ஜ.,வினர் யாத்திரை நடத்துவதும், கைது செய்யப்படுவதும்தொடர்கிறது.

யாத்திரையின், இரண்டாம் கட்ட பயணத்தை, திருவண்ணாமலையில், நேற்று முருகன் துவக்கினார். மேலும், யாத்திரையை, டிச., 7ம் தேதி நிறைவு செய்ய, முருகன் முடிவு செய்துள்ளார்.
எனவே, திருத்தி அமைக்கப்பட்ட வேல் யாத்திரை சுற்றுப்பயணத்தை, பா.ஜ., வெளியிட்டுள்ளது.அதன்படி, இன்று விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி; நாளை, சேலம், நாமக்கல்; 20ம் தேதி, ஈரோடு மாவட்டங்களில் யாத்திரை செல்கிறார்.மீண்டும், 22ம் தேதி கோவை; 23ல் திண்டுக்கல்; 24ல் கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர்; 25ல் நாகப்பட்டினம், திருவாரூர்; 26ல் புதுக்கோட்டை, திருச்சி; 27ல் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், யாத்திரை நடக்கும்.
டிச., 1 மதுரை; 2ல் விருதுநகர், தென்காசி; 3ல் கன்னியாகுமரி; 4ல் திருநெல்வேலி; 7ம் தேதி துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோவிலில், யாத்திரை, நிறைவு பெற உள்ளது.


'அழகிரி வந்தால் முழுமனதுடன் வரவேற்போம்'



''பா.ஜ.,வில், மு.க.அழகிரி இணைந்தால் முழுமனதுடன் வரவேற்போம்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:வெற்றிவேல் யாத்திரை, திருத்தணியில் துவங்கி, 10ம் தேதி ஓசூரில், முதல் கட்ட பயணத்தை, நிறைவு செய்தது. அடுத்து, இரண்டாம் கட்ட பயணத்தை, துவக்கி உள்ளோம். இந்த யாத்திரை, டிச., 7ல் நிறைவடையும். யாத்திரையில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். நிறைவு நிகழ்ச்சியில், தேசிய தலைவர் நட்டா பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.
மக்கள் நல திட்டங்களுக்காகவும், கொரோனா முன்கள வீரர்களை சந்திக்கவும், கறுப்பர் கூட்டத்தின் பின்னணியை, மக்களிடம் விளக்கவும், யாத்திரை செல்கிறோம். இதுவரை, யாத்திரையால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கலவரம் வரும் என கூறியவர்கள் தான், கலவரம் நடத்த திட்டமிட்டிருக்க வேண்டும். இது குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும்.
அமித்ஷா வருகை, எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். அவரது வருகை ஏற்படுத்தும் தாக்கத்தை, அவர் வந்து சென்ற பின், அறிந்து கொள்ளலாம். பா.ஜ., சார்பில், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளோம். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வைத்தால், மாவட்ட தலைவர்களுக்கு, 'இனோவா' கார் பரிசு வழங்க உள்ளோம்.பா.ஜ.,வில் பல்வேறு கட்சியினரும், இணைந்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இணைய முன்வந்தால், முழுமனதுடன் வரவேற்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.


முருகன் அழைப்பு: அழகிரி மகிழ்ச்சி




''தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அழைப்பு விடுத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று நிருபர்களிடம், ''பா.ஜ.,வில், மு.க.அழகிரி இணைந்தால் வரவேற்போம்,'' என்றார்.முருகனின் அழைப்பு குறித்து, அழகிரியிடம் கருத்து கேட்ட போது, அவர், ''முருகன் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி. இதுவரை, எந்த ஒரு அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி அல்லது அதற்கு பின் தான், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட முடிவை அறிவிப்பேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
18-நவ-202023:03:55 IST Report Abuse
PRAKASH.P This plan might work sure..
Rate this:
Cancel
Savitha Rajaram - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202021:35:11 IST Report Abuse
Savitha Rajaram BJP knows how to keep people at a distance. They need Alagiri now to cut DMK votes. So, please all don't worry about BJP Strategy.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
18-நவ-202020:30:57 IST Report Abuse
jagan இவர் தனி கட்சி ஆரம்பித்து செல்வாக்கை காட்ட வேண்டும். கடலில் கரைத்த பெருங்காயம் போல் பா ஜா வில் சேர்வது
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-நவ-202023:36:33 IST Report Abuse
தமிழவேல் என்னது கடலா....😮...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X