சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகளை மிரட்டி 6 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

Added : நவ 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
குடியாத்தம்:தாய், மகளை மிரட்டி ஆறு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நந்தத்தை சேர்ந்தவர் சிவராமன், 52; முன்னாள் ராணுவ வீரர்; இவரது மனைவி, உஷாராணி, 50; தம்பதிக்கு, 24 மற்றும் 22 வயதில் மகள்கள் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர்.சிவராமன் வீட்டுக்கு அருகே வசிப்பவர், யுவராஜ், 50;

குடியாத்தம்:தாய், மகளை மிரட்டி ஆறு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நந்தத்தை சேர்ந்தவர் சிவராமன், 52; முன்னாள் ராணுவ வீரர்; இவரது மனைவி, உஷாராணி, 50; தம்பதிக்கு, 24 மற்றும் 22 வயதில் மகள்கள் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர்.சிவராமன் வீட்டுக்கு அருகே வசிப்பவர், யுவராஜ், 50; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், உஷாராணி குளிப்பதை யுவராஜ் தன் மொபைல் போனில், வீடியோ எடுத்துள்ளார்.

இதை,உஷாராணி மற்றும் ஒரு மகளிடம் காண்பித்து,இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, ஆறு ஆண்டுகளாக அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதையும், மொபைல் போனில் வீடியோவாக எடுத்து, மற்றொரு மகளிடம் காண்பித்து, அவரையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மகள், தந்தையிடம் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த சிவராமன், உஷாராணி ஆகியோர், யுவராஜ் வீட்டுக்கு கடந்த, 10ம் தேதி சென்று, தகராறு செய்தபோது, அவர்களை யுவராஜ் கத்தியால் வெட்டினார். இது குறித்து புகார் அளித்தும், குடியாத்தம் போலீசார் விசாரணை செய்யாததால், வேலுார் எஸ்.பி.,க்கு, உஷாராணியின் மகள் கடிதம் மூலம் புகார் எழுதினார். குடியாத்தம் போலீசார் யுவராஜை கைது செய்தனர். பாலியல் புகார் குறித்து, மகளிர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202006:02:33 IST Report Abuse
Mani . V நம்ம பொள்ளாச்சி பெரிய இடத்து புள்ளிங்களுக்கு வேண்டியவனா இருப்பானோ? இது அந்த கூலி தொழிலாளியின் தவறாக மட்டும் தோன்றவில்லை. அந்த கூலி தொழிலாளிக்கு இருந்த கிரிமினல் புத்தியில் சிறிதளவு கூடவா இந்த பெண்களுக்கு இல்லாமல் போனது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X