சபரிமலை:பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் நடத்துகின்றனர்.
மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மண்டல சீசன் தொடங்கி விட்டால் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகின்றனர். திருவாபரணங்களையும், இங்குள்ள சாஸ்தா கோயிலிலும் வழிபட்டு செல்கின்றனர்.
கார்த்திகை முதல் தேதியான நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணி முதல் தரிசனம் தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வணங்கி செல்கின்றனர். டிச., 26 வரையிலும், அதன் பின் டிச.,31 முதல் 2021 ஜன.,12 வரை தினமும் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தரிசனம் செய்யலாம். மதியம் மற்றும் இரவு வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE