திருப்பூர்:தீபாவளி முடிந்த நிலையில், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கூட்டமில்லாததால், காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனையானது.திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, வெளிமாவட்டம், உள்ளூரில் இருந்து காய்கறி விற்பனை செய்ய, வாங்க, ஏறத்தாழ, 5 ஆயிரம் பேர் வருவர். தினமும், ஒன்றரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும்.தீபாவளி முடிந்த நிலையில், மார்க்கெட்டுக்கு குறைந்தளவு காய்கறி மட்டுமே வந்தது. இதனால், காய்கறிவிலை கிலோவுக்கு ஐந்து முதல் பத்து ரூபாய் குறைந்தது.தக்காளி கிலோ, 5 ரூபாய், வெண்டைக்காய் - 15, கத்தரிக்காய் - 40, பாகற்காய் - 35, பீர்க்கங்காய் - 35க்கு விற்றது.வியாபாரிகள் கூறியதாவது:காலை, 9:00 முதல், 2:00 மணி வரை மார்க்கெட் செயல்பட்டது. இருப்பினும், காய்கறி விற்பனையாகாமல் இருப்பு வைக்க குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டது. கூடுதலாக பொருட்களை வாங்கி இருப்பு வைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE