திருப்பூர்:அணைப்பாளையம் பகுதி கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய துாய்மை பணியாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.திருப்பூர், காலேஜ் ரோடு - மங்கலம் ரோடு இணையும் பகுதியாக அணைப்பாளையம் உள்ளது. இப்பகுதி மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால், லேசான மழை பெய்தால் கூட மழைநீர் அதிகளவில் சேர்ந்து விடுகிறது. ரயில்வே பாலத்தின் கீழ் கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து வாகனப் போக்குவரத்து தடைப்படுவது வாடிக்கை.இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் அதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து நீர் செல்ல முடியாமல் அடைத்து கொள்கிறது. இதனால், ரோட்டிலும், பாலத்தின் கீழும் கழிவு நீர் பெருக்கெடுத்து பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.கடந்த இரு நாட்களில் மழைநீர், கழிவு நீரும் இங்கு தேங்கியது; பெருமளவு பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயினுள் தேங்கி, கழிவு நீர் செல்ல முடியாமல் ரோட்டில் சென்று பாய்ந்தது.இதனால், துாய்மை பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து எவ்வளவு துாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொறுப்பற்ற முறையில் செயல்படுவோர், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டுவோர் திருந்த வேண்டும். அது வரை இது போன்ற அவதி தொடர்கதையே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE