திருப்பூர்:சென்னை - திருப்பதி ரயிலுக்கு தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், கோவை - திருப்பதி ரயில் இயங்க அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை - திருப்பதி இடையே, 13 ரயில்கள் இயங்கி வந்தது. இவற்றில் மூன்று ரயில்கள் தினசரி இயங்கின. கொரோனா அச்சத்தால் சிறப்பு ரயில் மட் டுமே இயக்கப்படுகிறது.அவ்வகையில், திருப்பதி மார்க்கமாக சபரி, கேரளா எக்ஸ்பிரஸ் இரு ரயில் மட்டுமே செல்கிறது.இவ்விரண்டு ரயில்களும் திருவனந்தபுரத்தில் இருந்து பயணத்தை தொடர்வதால் கோவை, திருப்பூர், ஈரோடு பயணிகளுக்கு முன்பதிவில் இடம் கிடைப்பதில்லை. கொரோனாவுக்கு முன் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக திருப்பதிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி நாட்களில் ரயில் இயக்கப்பட்டது. மறுமார்க்கமாக திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் ரயில் கோவை திரும்பியது.இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தது. நேற்று முதல் சென்னை - திருப்பதி ரயில் இயக்கத்துக்கு தமிழக அரசின் வலியுறுத்தலின் பேரில், ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.எனவே, கோவை - திருப்பதி இடையே இயங்கும் ரயில்களுக்கு ஒப்புதல் வழங்கினால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE