திருநெல்வேலி:நெல்லை தென்காசியில் தொடர்மழையினால் தாமிரபரணி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை களை கட்டியுள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9.7 அடி உயர்ந்து 111.20 அடியானது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 18.5 அடி உயர்ந்து 118.50 அடியானது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 86.10 அடியானது. நம்பியாறு கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. தாமிரபரணி மற்றும் கால்வாய்களில் அதிகஅளவில் தண்ணீர் செல்கிறது. திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன்கோயிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE