பொது செய்தி

தமிழ்நாடு

பல்லடம், காங்கயத்தில் 43 மி.மீ., மழை: பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 18, 2020
Share
Advertisement
திருப்பூர்;வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், மானாவாரி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தென்மேற்கு பருவமழை கருணை காட்டி சென்றுள்ளது.எதிர்பாராத வகையில், மூன்று மடங்கு அதிக மழை பெய்ததால், விவசாய பணிகள் முன்கூட்டியே துவங்கப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.வடகிழக்கு பருவமழை,
 பல்லடம், காங்கயத்தில் 43 மி.மீ., மழை: பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர்;வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், மானாவாரி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தென்மேற்கு பருவமழை கருணை காட்டி சென்றுள்ளது.எதிர்பாராத வகையில், மூன்று மடங்கு அதிக மழை பெய்ததால், விவசாய பணிகள் முன்கூட்டியே துவங்கப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.வடகிழக்கு பருவமழை, கடந்த மாதம் போக்கு காட்டிவிட்டது. இம்மாதத்தில், இரண்டாவது வாரத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. மானாவாரி பயிர் சாகுபடியை, முழுமையாக அறுவடை செய்ய, இப்பருவத்தில் கட்டாயம் மழை தேவை.காத்திருந்த விவசாயிகள் மகிழும் வகையில், வடகிழக்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி, 16.86 மி.மீ., மழை பெய்துள்ளது.காங்கயம் மற்றும் பல்லடத்தில், தலா, 43 மி.மீ., திருப்பூர் தெற்கு - 23 மி.மீ., அவிநாசி - 40 மி.மீ., ஊத்துக்குளி - 20 மி.மீ., திருப்பூர் வடக்கு - 14 மி.மீ., வெள்ளகோவில் - 13.30 மி.மீ., குண்டடம் - 10 மி.மீ., தாராபுரம் - ஆறு மி.மீ., என, மாவட்டத்தில் சராசரியாக, 16.86 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.நேற்று மதியம் துவங்கி, நள்ளிரவு வரையில், பரவலாக மழை பெய்து கொண்டிருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ரோட்டில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்தும் அவ்வப்போது பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X