சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வீடியோ' ஆதாரத்தின்படி விசாரணை: சி.பி.சி.ஐ.டி. - ஐ.ஜி. சங்கர் தகவல்

Added : நவ 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டவர் இறந்தது பற்றி வெளியான வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் விசாரிக்கப்படும்'' என சி.பி.சி.ஐ.டி. - ஐ.ஜி. சங்கர் தெரிவித்தார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் 39; முந்திரி வியாபாரி. இவர் மனைவி பிரேமா மற்றும் இரு குழந்தைகளுடன் நெய்வேலி வடக்குத்து கிராமத்தில் வசித்தார்.செயின்

சென்னை:''விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டவர் இறந்தது பற்றி வெளியான வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் விசாரிக்கப்படும்'' என சி.பி.சி.ஐ.டி. - ஐ.ஜி. சங்கர் தெரிவித்தார்.

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் 39; முந்திரி வியாபாரி. இவர் மனைவி பிரேமா மற்றும் இரு குழந்தைகளுடன் நெய்வேலி வடக்குத்து கிராமத்தில் வசித்தார்.செயின் பறிப்பு வழக்கில் அக். 30ல் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு விருத்தாச்சலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

நவம்பர் 4ம் தேதி இரவு 10:30 மணியளவில் செல்வ முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இவரை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

கடலுார் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் 'செல்வமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது. இவரை கைது செய்வதற்கு முதல் நாளே நகை மீட்கப்பட்டுள்ளது. அக். 29ம் தேதி போலீசாருடன் செல்வமுருகன் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.'இவரை போலீசார் தாக்கியதற்கான நேரடி சாட்சிகள் உள்ளன.

முந்திரி வியாரியான செல்வமுருகன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்' என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னையில் சில 'வீடியோ'க்களை வெளியிட்டார்.இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. - ஐ.ஜி. சங்கர் கூறுகையில்''செல்வமுருகன் தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
18-நவ-202011:33:45 IST Report Abuse
Srinivasan Rangarajan சாத்தான்குளம் விவகாரம் முடியும் முன்னே நெய்வேலியில் அதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுலேந்து ஒன்று தெரியுது. நாட்டுல நடக்கிறது எதையும் கண்டுகொள்ளாமல் தங்கள் 'கருமமே' கண்ணாக சில காவல் அதிகாரிகள் செயல் படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X