கோவை;கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று பாதிப்பு நாள் தோறும் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடு முழுவதுமாக தளர்த்தப்பட்டு வருகிறது. சினிமா தியேட்டர், சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.அனைத்து அரசு அலுவலகங்களும், நிபந்தனையின்றி வழக்கம் போல செயல்படுகிறது. சமூக இடைவெளி பின்பற்றவும், முக கவசம் கட்டாயம் அணிந்து செல்லவும், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கோவை நீதிமன்ற வளாகத்தில், கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக மாவட்ட நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்கள் மற்றும் வழக்கில் தொடர்புடைய பொதுமக்கள் பலர், தேவையில்லாமல் சுற்றுவதை காணமுடிகிறது.வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கோர்ட் வளாகத்திற்குள் வரும் போது வக்கீல் சான்றிதழுடன், வழக்கு எண், கோர்ட் பெயர், வாய்தா தேதி ஆகிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும். வக்கீல் சான்று இல்லாமல் வருபவர்களுக்கு, அனுமதி கிடையாது.நீதிமன்ற வளாக்ததுக்குள் செயல்படும், போஸ்ட் ஆபிஸ் மற்றும் வங்கிக்கு வரும் பொதுமக்கள், பாஸ்புக், டெபாசிட் ரசீது மற்றும் தகவல் தொடர்பு கடிதம் எடுத்து வர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை, இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE