தமிழ்நாடு

கொரோனா தொற்று குறைய தொடரட்டும் கொண்டாட்டம்! கோவை கலெக்டர் அறிவுறுத்தல்

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020
Share
Advertisement
கோவை;தீபாவளி பண்டிகை காரணமாக தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சூழலில், எதிர்வரும் பத்து நாட்கள் சவாலாகவே இருக்கும் என, மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் பண்டிகைக்கு வெளியூர் சென்று வந்தவர்கள், முடிந்தவரை பொது இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதை தவிர்க்குமாறு, கோவை கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டுள்ளார். கோவை மாவட்டத்தில்
கொரோனா தொற்று குறைய தொடரட்டும் கொண்டாட்டம்! கோவை கலெக்டர் அறிவுறுத்தல்

கோவை;தீபாவளி பண்டிகை காரணமாக தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சூழலில், எதிர்வரும் பத்து நாட்கள் சவாலாகவே இருக்கும் என, மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் பண்டிகைக்கு வெளியூர் சென்று வந்தவர்கள், முடிந்தவரை பொது இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதை தவிர்க்குமாறு, கோவை கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் செப்., இறுதி வரை, கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தது. பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.தற்போதைய சூழலில், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மாநகராட்சி இணைந்து ஒரு நாள் பாதிப்பை, 100க்குள் கொண்டு வர பரிசோதனைகள், மருத்துவ முகாம்கள், வீடு வீடாக ஆய்வு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
கடுமையான நெரிசலுக்கு மத்தியில் போக்குவரத்து பயணம், கடைவீதிகளில் கும்பல்களுக்கு மத்தியில் ஷாப்பிங் என சென்றவர்கள் வாயிலாக, தொற்று பரவலுக்கு அதிக வாய்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், வெளியூருக்கு சென்று திரும்பியவர்கள், கும்பல்களுக்கு மத்தியில் ஷாப்பிங் சென்றவர்கள், தாமாக சில நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதை, தவிர்க்க முன்வர வேண்டும்.தவிர்க்க முடியாதவர்கள், சமூக இடைவெளி, முககவசம் போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம்; இதுபோன்ற சூழலில் உள்ளவர்கள், அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், தயக்கமின்றி உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.கோவையில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. தீபாவளி சமயத்தில் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை, பத்து நாட்களுக்கு பின்பே தெளிவாக கூற இயலும். கோவையில் பரவல் ஏற்பட்டு இருக்காது என்பதே நம்பிக்கை; இருப்பினும், கண்காணிப்பு பணிகள் வழக்கம்போல் தீவிரப்படுத்தப்பட்டு, பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அறிகுறியிருப்பவர்கள் தாமதிக்காமல் தாமாக முன்வந்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.-ராஜாமணிகோவை கலெக்டர்.
வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், வெளியூருக்கு சென்று திரும்பியவர்கள், கும்பல்களுக்கு மத்தியில் ஷாப்பிங் சென்றவர்கள், தாமாக சில நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாதவர்கள், சமூக இடைவெளி, முககவசம் போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X