இந்திய மாணவர்கள் வாயிலாக ரூ.5.7 லட்சம் கோடி வருவாய்

Added : நவ 18, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:கடந்த கல்வி ஆண்டில் இந்திய மாணவர்கள் வாயிலாக அமெரிக்காவிற்கு 5.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.அமெரிக்க கல்வி மற்றும் கலாசார விவகார பணியகம் மற்றும் சர்வதேச கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் மாணவர்

வாஷிங்டன்:கடந்த கல்வி ஆண்டில் இந்திய மாணவர்கள் வாயிலாக அமெரிக்காவிற்கு 5.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அமெரிக்க கல்வி மற்றும் கலாசார விவகார பணியகம் மற்றும் சர்வதேச கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் மாணவர் எண்ணிக்கையில் 1.8 சதவீதம் சரிவு இருந்தது.

இருப்பினும் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 5.5 சதவீதம் பேர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 10 லட்சத்து 75 ஆயிரத்து 496 பேர் பயில்கின்றனர்.வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளது. தொடர்ந்து 16வது ஆண்டாக சீன மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த கல்வி ஆண்டில் சீனாவைச் சேர்ந்த 3.72 லட்சம் மாணவர்கள் படித்தனர்.எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மாணவர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் படித்த 1.93 லட்சம் இந்திய மாணவர்களின் வாயிலாக அமெரிக்காவிற்கு 5.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X