ஆபத்தான மின்கம்பம்; அச்சத்தில் மக்கள்மாநகராட்சி, தெற்கு மண்டலம், 76வது வார்டுக்கு உட்பட்ட, தெலுங்குபாளையம், வேடபட்டி ரோடு வீதியில் உள்ள, மின் கம்பம்(எண்: 8) சிதிலமடைந்துள்ளது. கீழே விழுந்து விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.-செந்தில்குமார், தெலுங்குபாளையம்.
சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 18 வது வார்டுக்கு உட்பட்ட, வடவள்ளி, லிங்கனுார், அண்ணாநகர் ஐந்தாவது வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- முருகானந்தம், அண்ணாநகர்.
80 அடி ரோட்டில் குப்பை குவியல்மாநகராட்சி, 73வது வார்டுக்கு உட்பட்ட, ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி ரோட்டில், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பை குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராபர்ட், ஒலம்பஸ்.
சாலை பணி நிறுத்தம்மாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, பூந்தோட்டம் நகரில், சில மாதங்களுக்கு முன், சாலை புதுப்பிக்கும் பணி துவக்கப்பட்டது. ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலையில், பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணியை துவக்கி, விரைவில் சாலையை அமைக்க வேண்டும்.- கணேசன், பூந்தோட்டம் நகர்.
குப்பை தொட்டி வேண்டும்கணபதி, மணியகாரம்பாளையம், பாலமுருகன் நகர், 6 புளியமரம் செல்லும் ரோட்டின் திருப்பத்தில், குப்பை குவிக்கப்படுகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- ஜெயப்பிரகாஷ், பாலமுருகன் நகர்.
சிலாப் அமைக்கணும்நஞ்சுண்டாபுரம் ரோடு, காளியப்பா காம்ப்ளக்ஸ் அருகில், சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்துள்ளது. கடைகளுக்கு வருவோர் இதில், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- கல்யாணசுந்தர், நஞ்சுண்டாபுரம்.
போர்வெல் தண்ணீர் வருவதில்லைமாநகராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட, வடவள்ளி, ஆர்.கே.ஜி., நகரில், போர்வெல் தண்ணீர் வினியோகம் சீராக இருப்பதில்லை. தட்டுப்பாடு நிலவுகிறது; மக்கள் அவதிப்படுகின்றனர்.- மகாதேவன், ஆர்.கே.ஜி., நகர்.
மரக்கிளைகளுக்கு மத்தியில் விளக்குமாநகராட்சி, 97 வது வார்டுக்கு உட்பட்ட, மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம், எம்.ஜி.ஆர்., நகர் முதல் வீதியில் உள்ள, மின்கம்பத்தை (எண்:16) மறைத்தபடி, மரம் வளர்ந்துள்ளது. இதனால், விளக்கு வெளிச்சம் சாலைக்கு தெரிவதில்லை.- திருமூர்த்தி, எம்.ஜி.ஆர்., நகர்.
குப்பை குவியல்பீளமேடு, ேஹாப் காலேஜ், பி.ஆர்.புரம், ஜீவா வீதியில் குப்பை குவிந்துள்ளது. இப்பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வந்து, பல வாரங்கள் ஆகிறது.- ராஜேஷ்குமார், ஜீவா வீதி.
குழாய் உடைப்பால் வீணாகுது நீர்அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ் பகுதியில், மின் கேபிள் சரி செய்ய குழி தோண்டியபோது, பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- சஞ்சய்பிரபு, பீளமேடு.
மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட, ரங்கம்மாள் கோவில் வீதியில் உள்ள, மின்கம்பம்(எண்:7) சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதை உடனடியாக அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- தியாகு, ரங்கம்மாள் கோவில் வீதி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE