பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து கழக தொழிற்சங்க வேலை நிறுத்த விளக்க கூட்டம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
கோவை:கோவை கோட்ட போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் குறித்த விளக்க கூட்டம், கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் மு நடந்தது.மத்திய அரசை கண்டித்து, வரும் 26ல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த, எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில், பங்கேற்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக

கோவை:கோவை கோட்ட போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் குறித்த விளக்க கூட்டம், கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் மு நடந்தது.மத்திய அரசை கண்டித்து, வரும் 26ல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த, எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில், பங்கேற்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.இது குறித்து, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.கோவை கோட்ட தலைமை அலுவலகம் எதிரிலும், மற்ற 14 அரசு பஸ் டெப்போ கிளைகளிலும் இக்கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தம் உட்பட சட்ட திருத்தங்களால், தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் விவாதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X