கோவை:கோவை விமானநிலையத்திற்கு, மேலும் இரண்டு புதிய 'ஏரோபிரிட்ஜ்' துவக்கப்பட்டுள்ளது; இத்துடன், 10 கோடி ரூபாய் செலவில், நான்கு ஏரோ பிரிட்ஜ்களை கோவை விமான நிலையம் பெற்றுள்ளது.விமானத்தில் பயணிப்போர், விமானத்தில் ஏறவும், இறங்கவும் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த படிக்கட்டுகளில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சற்று சிரமமாக இருந்தது.கோவை விமானநிலையத்திற்கு இனி இந்த பிரச்னைகள் இருக்காது. விமானத்திலிருந்து நேரடியாக விமானநிலையத்துக்குள் நடந்து வரும் வகையில், இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை விமான நிலையத்தில், ஏற்கனவே இரண்டு பயணிகள் இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இரு பாலங்களும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இனி படிக்கட்டுகளின் பயன்பாடுகள் குறைக்கப்பட்டு விடும்.விமானநிலைய இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:கோவை விமான நிலையத்தில், தற்போது நான்கு ஏரோபிரிட்ஜ்கள் உள்ளன. அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நான்கு இணைப்புகளால், விமானத்தில் பயணிப்போர் எவ்வித சிரமும் இல்லாமல், விமானத்திற்குள் நேரடியாக செல்ல முடியும். விமானத்திலிருந்து விமான நிலையத்துக்குள் வர முடியும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கும்.இந்த புதிய வசதி 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏ 320 ஏர்பஸ் ரக விமானங்கள் வந்தாலும், இந்த வழியை பயன்படுத்த முடியும். இங்கு வரும் அனைத்து விமானங்களும் இதை பயன்படுத்த முடியும் என்பதால், இனி படிக்கட்டில் ஏறி இறங்கும் சிரமம் பயணிகளுக்கு இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நான்கு இணைப்புகளால், விமானத்தில் பயணிப்போர் எவ்வித சிரமும் இல்லாமல் விமானத்திற்குள் நேரடியாக செல்ல முடியும். விமானத்திலிருந்து விமான நிலையத்துக்குள் வர முடியும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE