இந்தியா

உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.லாஸ்பேட்டை தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சாமிநாதன் எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கி தந்துள்ளார். இந்த பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி, உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில்

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லாஸ்பேட்டை தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சாமிநாதன் எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கி தந்துள்ளார். இந்த பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி, உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில செயலர்கள் ரத்தினவேல், லதா, வல்லுனர் பிரிவு தலைவர் ஸ்ரீதர், மகளிரணி பொதுச் செயலர் கனகவல்லி, இளைஞரணி துணைத் தலைவர் ராக் பேட்ரிக், உழவர்கரை மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சோமசுந்தரம், ஊடகப் பொறுப்பாளர் குருசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டம் நடத்திய சாமிநாதன் எம்.எல்.ஏ., வுடன் நகராட்சி ஆணையர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.இதுகுறித்து, சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறும்போது, 'சலவையாளர் நகரில் துணிகளை உலர்த்தும் கூடம் அமைக்க ரூ. 18 லட்சம் செலவிலும், சாந்தி நகரில் சாலை அமைக்க ரூ.22 லட்சம் செலவிலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் பூமி பூஜை நடந்தது.

அதுபோல, சுப்பையா நகர் இடுகாட்டில் கருமாதி மண்டபம் கட்டுவதற்கு நான் பரிந்துரை செய்து எம்.பி., நிதியை பெற்று தந்தேன்.இந்த பணிகளுக்கு பூமி பூஜை நடந்து ஓராண்டாகியும் இதுவரை பணிகள் துவக்கப்படவில்லை. 2 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.10 லட்சம் மட்டுமே செலவிட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணிகளுக்கு தடை போடுகின்றனர். பணிகளை நாளை (இன்று) துவக்குவதாக ஆணையர் உறுதியளித்துள்ளதால், போராட்டத்தை கைவிடுகிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X