குன்னுார்:மதுரையில் பலியான இரு தீயணைப்பு வீரர்களுக்கு, குன்னுாரில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.மதுரையில், பழமையான கட்டடத்தில் இயங்கிய ஜவுளி கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுக்கு, குன்னுார் தீயணைப்பு நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இருவரின் படத்தை வைத்து, நிலைய அலுவலர் மோகன், மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அனைத்து தீயணைப்பு வீரர்களும், 'சல்யூட்' செய்து, மவுன அஞ்சலி செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE