குன்னுார்:நீலகிரியில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரட் அறுவடை செய்து, கழுவும் பணியில், கடும் குளிரிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை தீவிரமடைந்து வருகிறது. இப்பகுதிகளில், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் விவசாயம் அதிகம் பயிரிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் காய்கறிகள் அழுகும் அபாயம் உள்ளது.தற்போது, விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 75 ருபாய் வரை விலை கிடைக்கிறது. அதில், கேரட் உள்ளிட்டவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கேத்தி, பாலாடா பகுதிகளில் அதிகாலை முதல், கேரட் கழுவும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE