பொது செய்தி

தமிழ்நாடு

அரிய வகை பறவை 'விசிட்': ஆய்வாளர்கள் ஆச்சரியம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் அருகே, அரியவகை பறவை தென்பட்டது, பறவை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.குன்னுார் கேத்தி அருகே கோலணி மட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி. இவரின் தோட்டத்தில், வந்த அரிய வகை பறவையை, காகம் உள்ளிட்ட மற்ற பறவைகள் விரட்டியதை கண்டார். உடனடியாக அந்த அரிய வகை பறவையை மீட்டு புகைப்படங்கள் எடுத்து, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டு விட்டார்.இந்த அரிய
 அரிய வகை பறவை 'விசிட்':  ஆய்வாளர்கள் ஆச்சரியம்

குன்னுார்:குன்னுார் அருகே, அரியவகை பறவை தென்பட்டது, பறவை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.குன்னுார் கேத்தி அருகே கோலணி மட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி. இவரின் தோட்டத்தில், வந்த அரிய வகை பறவையை, காகம் உள்ளிட்ட மற்ற பறவைகள் விரட்டியதை கண்டார். உடனடியாக அந்த அரிய வகை பறவையை மீட்டு புகைப்படங்கள் எடுத்து, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டு விட்டார்.இந்த அரிய வகை பறவை குறித்து, இயற்கை வரலாற்று சங்க ஆராய்ச்சி உயிரியலாளர் சாம்சன் ஆரோக்கியநாதன் கூறுகையில்,'' இது, ஜம்மு காஷ்மீர், இமாச்சல் உள்ளிட்ட வட மாநிலங்களில் காணப்படும், சிறு குயில் இனத்தை சேர்ந்த 'லசார்ட் குக்கூ' பறவையாகும். இந்த பறவை தமிழகத்தில் ஒன்பது இடங்களில் வந்து சென்றது பதிவாகியுள்ளது. நீலகிரியில், 1983ம் ஆண்டு கடைசியாக பதிவு செய்யப்பட்டது. 37 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தென்பட்டுள்ளது பறவை ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X