பொது செய்தி

தமிழ்நாடு

வனவிலங்கு கணக்கெடுப்பு: முதுமலையில் துவங்கியது

Added : நவ 18, 2020
Share
Advertisement
கூடலுார்:முதுமலை வெளிவட்ட பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்வட்டம் பகுதியில், பருவமழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு, 5ம் தேதி துவங்கி, 11ல் நிறைவு பெற்றது. வெளிவட்டம் பகுதிக்கு உட்பட்ட, சீகூர், சிங்காரா வனச்சரகங்களில் நேற்று, முதல் வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது.துணை இயக்குனர் ஸ்ரீகாந்த்
  வனவிலங்கு கணக்கெடுப்பு: முதுமலையில் துவங்கியது

கூடலுார்:முதுமலை வெளிவட்ட பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்வட்டம் பகுதியில், பருவமழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு, 5ம் தேதி துவங்கி, 11ல் நிறைவு பெற்றது. வெளிவட்டம் பகுதிக்கு உட்பட்ட, சீகூர், சிங்காரா வனச்சரகங்களில் நேற்று, முதல் வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது.துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் வனச்சரகர் காந்தன், முரளி, ரமேஷ் தலைமையில், 117 வன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்; வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்களை, 'மொபைல்-ஆப், டேட்டா' சீட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'முதுமலையில் 39 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவுக்கு தலா மூன்று ஊழியர்கள் வீதம் வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணி, 22-ம் தேதி நிறைவு பெறும். தொடர்ந்து, தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X