பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தலில் ஜாமின் காப்பகத்திற்கு பொன்னி அரிசி: உயர்நீதிமன்றம் நிபந்தனை

Added : நவ 18, 2020
Share
Advertisement
மதுரை:சட்டவிரோதமாக ரேஷன் அரிசி வைத்திருந்ததாக பன்னீஸ்வரன் (எ) பாண்டீஸ்வரன் என்பவர் மீது உத்தமபாளையம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். அவர் ஜாமின் அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு 'மனுதாரர் திருவள்ளூரில் தங்கி அங்கு (ஜே.எம்.1) நீதிமன்றத்தில் ஆஜராக

மதுரை:சட்டவிரோதமாக ரேஷன் அரிசி வைத்திருந்ததாக பன்னீஸ்வரன் (எ) பாண்டீஸ்வரன் என்பவர் மீது உத்தமபாளையம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

அவர் ஜாமின் அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு 'மனுதாரர் திருவள்ளூரில் தங்கி அங்கு (ஜே.எம்.1) நீதிமன்றத்தில் ஆஜராக நிபந்தனையுடன் தேனி நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. கொரோனா ஊரடங்கால் நிபந்தனையை நிறைவேற்ற இயலவில்லை.

ஜாமினை தேனி நீதிமன்றம் ரத்து செய்தது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்'என தெரிவித்தது. நீதிபதி: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மதுரை ரோஜாவனம் முதியோர் காப்பகத்திற்கு மனுதாரர் 30 மூடை (தலா 50 கிலோ) பொன்னி அரிசி வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X