சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர் வலைகள் மூழ்கடிப்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் மீனவர்கள் வலையை மூழ்கடித்ததால் வெறும் படகுடன் கரை திரும்பினர்.நவ.,16ல் ராமேஸ்வரத்தில் இருந்து 600 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். நேற்று மதியம் 2:00 மணிக்கு அங்கு 5 அதிவேக படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் எச்சரித்து மீன்பிடிக்க விடாமல்

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் மீனவர்கள் வலையை மூழ்கடித்ததால் வெறும் படகுடன் கரை திரும்பினர்.

நவ.,16ல் ராமேஸ்வரத்தில் இருந்து 600 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். நேற்று மதியம் 2:00 மணிக்கு அங்கு 5 அதிவேக படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் எச்சரித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து விட்டு திரும்பினர். 10க்கும் மேலான படகின் மீனவர்கள் வலையை இழுக்க தாமதம் ஆனதால், வலையை வெட்டி மூழ்கடித்து விட்டு வெறும் படகுடன் கரை திரும்பினார்கள்.மீன்வரத்து இல்லாததால் ஒரு படகிற்கு ரூ.40 முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X