பொது செய்தி

தமிழ்நாடு

கறிக்கோழி வளர்ப்பு தொகை உயர்வு அரசின் முத்தரப்பு பேச்சில் முடிவு

Added : நவ 18, 2020
Share
Advertisement
சென்னை:அரசு நடத்திய முத்தரப்பு பேச்சில், கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு, வளர்ப்பு தொகையை உயர்த்தி வழங்க சம்மதித்தனர்.கறிக்கோழி வளர்ப்போருக்கு, வளர்ப்புக்கூலியை உயர்த்துவது தொடர்பாக, அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில், நேற்று, முத்தரப்பு பேச்சு நடந்தது.தமிழ்நாடு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு

சென்னை:அரசு நடத்திய முத்தரப்பு பேச்சில், கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு, வளர்ப்பு தொகையை உயர்த்தி வழங்க சம்மதித்தனர்.

கறிக்கோழி வளர்ப்போருக்கு, வளர்ப்புக்கூலியை உயர்த்துவது தொடர்பாக, அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில், நேற்று, முத்தரப்பு பேச்சு நடந்தது.தமிழ்நாடு கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் சங்க பிரதிநிதிகள்; கால்நடைத்துறை செயலர் கோபால், இயக்குனர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பேச்சு முடிவில், கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு, குறைந்தபட்ச வளர்ப்பு தொகையான, 3.50 ரூபாயை, ஆறு ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்புக் கொண்டனர்.மேலும், 2,000 த்துக்கும் குறைவாக கறிக்கோழிகள் வளர்க்கும், சிறு பண்ணையாளர்களுக்கு, ஒரு கோழிக்கு, 1 ரூபாய் வீதம், கூடுதல் ஊக்கத்தொகை வழங்கவும், இரு தரப்பினராலும், ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கறிக்கோழி வளர்ப்பதற்கான ஒப்பந்தத்தை, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய முறையில், தமிழில் ஒரே மாதிரியாக வடிவமைக்கவும், இரு தரப்பினரும் கையொப்பமிட்ட ஒப்பந்த பத்திரத்தின் நகல், கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதை, கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நிறுவனங்கள் கொடுக்கும் தீவனம் மற்றும் மருந்துகளைத் தவிர, மற்ற பொருட்களை, ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் இல்லாமல், கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் பயன்படுத்தக் கூடாது என, பேச்சில் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X