சென்னை:நாடக கலைஞர்கள், தங்கள் வாத்திய கருவிகளை, அரசு பஸ்களில், இலவசமாக எடுத்து செல்லஅனுமதி அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'அரசு பஸ்களில், நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வாத்திய கருவிகளை, அரசு பஸ்களில், இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்' என, சட்டசபையில், போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் அறிவித்தார்.
இதன்படி, நாடக கலைஞர்கள் மட்டும், தங்களின் ஆடை அணிகலன்கள், ஒப்பனை பொருட்கள், இசை வாத்திய கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம் மற்றும் இதர சிறிய அளவிலான இசை கருவிகளை, அரசு பஸ்களில் இலவசமாக எடுத்துச் செல்ல, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை, போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE