பொது செய்தி

இந்தியா

இந்திய ஏவுகணை சோதனை வெற்றி

Added : நவ 18, 2020
Share
Advertisement
பாலசோர்:போர் விமானங்களை விரைந்து தாக்கி அழிக்கும் வகையில், நம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், புதிய ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த ஏவுகணையின் முதற்கட்ட பரிசோதனை, 13ல் நடந்தது. இது வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏவுகணையை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.இந்நிலையில், ஒடிசாவின் பாலசோர் அருகே, நேற்று

பாலசோர்:போர் விமானங்களை விரைந்து தாக்கி அழிக்கும் வகையில், நம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், புதிய ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏவுகணையின் முதற்கட்ட பரிசோதனை, 13ல் நடந்தது. இது வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏவுகணையை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.இந்நிலையில், ஒடிசாவின் பாலசோர் அருகே, நேற்று இரண்டாம் முறையாக புதிய ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கியதுடன், அதை முற்றிலுமாக அழித்தது.ஆளில்லா, 'ஜெட்' விமானங்களை தாக்கி அழிக்கும் வகையில், இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு உள்ளது என, ராணுவ அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X