ஊட்டி:நீலகிரியில் பரவலாக பெய்யும் மழையால் அணை மற்றும் தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் பகுதிகளில் மழை அதிகமாக பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, கோடநாடு, 40 மி.மீ, குன்னுார், 35 மி.மீ, கெத்தை, 35 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அப்பர்பவானி, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கள், மாயார் உட்பட, 13 அணைகளில், 85 முதல் 95 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இங்குள்ள, 30 தடுப்பணைகளும் நிரம்பியுள்ளன. இதை தவிர, கோத்தகிரி ஈளாடா தடுப்பணை, மசினகுடி மாயார் மரவக்கண்டி அணையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.மழை தொடரும் பட்சத்தில், அணைகளை திறந்து உபரிநீர் வெளியேற்ற மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தினசரி மின் உற்பத்தி, 650 மெகாவாட் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'அணைகளில், 90 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும், ஆறு மாதங்களுக்கு தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்' என்றனர்.அணை நீர்மட்டம் (நேற்றைய நிலவரம்- - அடியில்): முக்கூர்த்தி-, 18--15.5; பைக்காரா,100--90.5; சாண்டி நல்லா-, 49--44.5; கிளன்மார்கன்-,33-29.5; மாயார்-, 17--16; அப்பர்பவானி-, 210-200; பார்சன்ஸ்வேலி,-77--74; போர்த்திமந்து,- 130--122.5; அவலாஞ்சி,171- -168.5; எமரால்டு,184--178; குந்தா,89-86.5; கெத்தை-, 156 -152.5.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE