பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலை, பொள்ளாச்சியில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 18, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை ,பொள்ளாச்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அமராவதி, திருமூர்த்தி அணைகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 68.08 அடி நீர் மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன
 உடுமலை, பொள்ளாச்சியில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

உடுமலை:உடுமலை ,பொள்ளாச்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அமராவதி, திருமூர்த்தி அணைகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 68.08 அடி நீர் மட்டமும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 2,257.68 மில்லியன் கன அடி நீர் இருப்பும் இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, 565 கன அடி நீர் வரத்து இருந்தது. பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக, அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு வாரத்தில் அணை நீர் மட்டம், 4 அடி உயர்ந்துள்ளது.திருமூர்த்தி அணையில், மொத்தமுள்ள, 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 43.37 அடி நீர் மட்டம் இருந்தது. நீர் இருப்பு, 1,267.54 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 822 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்கு, 219 கன அடி நீர் திறக்கப்பட்டது. உடுமலை பகுதியில் மொத்தமுள்ள 9 குளங்களில், 5 குளங்களில், 50 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு உயர்ந்துள்ளது.பொள்ளாச்சிபொள்ளாச்சி பகுதியில், தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால், மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவமழையும், பெய்து வருவதால், கிராமப்புறங்களில் உள்ள குளங்களுக்கும், அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.வால்பாறை அருகே சோலையாறு அணை, 160 அடி கொள்ளளவில், 153.94 அடியாக உள்ளது. 15 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் மொத்தம் உள்ள, 72 அடியில், 69.68 அடியாக உள்ளது. 26மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. ஆழியாறு அணை, 120 அடியில், 114.80 அடியாக உள்ளது. 6.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X