கமிஷன் இன்றி ஒப்பந்தம் இல்லை என்பதே காங்., கொள்கை: பா.ஜ., குற்றச்சாட்டு

Updated : நவ 18, 2020 | Added : நவ 18, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: 'கமிஷன் இன்றி ஒப்பந்தங்கள் இல்லை என்பதை, காங்கிரஸ் தலைவர்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர்' என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்ததலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பயணம் செய்ய, நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க, 2010ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுஒப்பந்தம் போடப்பட்டது. இதில், பெரும் ஊழல்
congress, BJP, Ravi Shankar Prasad

புதுடில்லி: 'கமிஷன் இன்றி ஒப்பந்தங்கள் இல்லை என்பதை, காங்கிரஸ் தலைவர்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர்' என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்ததலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பயணம் செய்ய, நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க, 2010ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுஒப்பந்தம் போடப்பட்டது. இதில், பெரும் ஊழல் நடந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.


latest tamil news



சி.பி.ஐ., விசாரணைக்கு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். ஆனால், விசாரணை மந்தமாக நடந்தது.கடந்த, 2014ல், தே.ஜ., கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், முக்கிய குற்றவாளி ராஜிவ் சக்சேனா கைது செய்யப்பட்டார். இவர், காங்., மூத்த தலைவர்கள், சல்மான் குர்ஷித், அகமது படேல் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் பகுல்நாத் மற்றும் உறவினர் ரதுல் புரி ஆகியோரது பெயர்களை விசாரணையில் குறிப்பிட்டு உள்ளார்.

கமிஷன் இன்றி ஒப்பந்தங்கள் இல்லை என்பதை, காங்., தலைவர்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர். எந்த ராணுவ ஊழல் வழக்கை எடுத்துக் கொண்டாலும், அதில் காங்., தலைவர்கள் பெயர் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-நவ-202020:15:52 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் பணம் கொடுக்காமல் (வாக்கு சீட்டுக்கு) ஓட்டு பெறுவதில்லை. கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தைக் கொண்டு பாமர மக்களின் வாக்கை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். காசுக்கு கையேந்தும் மக்கள் உள்ளவரை திராவிட கட்சிகளை அழிப்பது கடினம்தான். தேர்தலுக்கு 90 நாள்கள் இருக்கும் முன்பே தேர்தலில் நிற்போர் பணத்தை பக்குவமாக கொடுத்து விடுகிறார்கள். அதை தடுக்க வியூகம் வகுத்தால் நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள். காங்கிரஸ் அழிந்து வருகிறது. ஊழல் கட்சிகளும் அழியனும். மனிதநேயமுள்ள நேர்மையுள்ள ஆன்மீக நாட்டமுள்ள பா.ஜ.க வென்று நல்லாட்சி நடத்தும்....
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
18-நவ-202017:33:03 IST Report Abuse
ramesh கமிஷனுக்காகத்தான் சென்னையில் ஊருக்குள் இருந்த நல்லரோடுகள் எல்லாம் தேவை இல்லாமல் தோண்டப்பட்டு இந்த வருடத்திற்குள் டெண்டர் விட்டு கமிஷன் பார்க்க வேலைகள் நடக்கிறது .இப்படி தோண்டப்பட்ட ரோடுகள் டெண்டர் முடியாததால் மழையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர் வழுக்கி விழுந்து காயப்படுவது இங்கே தொடர் கதையாக இருக்கிறது .அரசியல் வாதிகள் எவரும் யோக்கியர் இல்லை
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-நவ-202012:43:24 IST Report Abuse
Dr. Suriya sariyaathaan சொல்லி irukaaru... கமிஷன் கட்டு படி ஆகலேன்னு தானே ரபேலு காங்கிரஸ் ஆட்சியில் வரல .... இப்போ கட்டுப்படி ஆயிடுச்சான்னு இந்த சொம்புக கேட்கும்... அதான் உச்சமே இதுல கமிஷன் ஊழல் இல்லை என்று சொல்லி பப்புவை மூக்குடைத்ததே....
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
18-நவ-202014:46:01 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்இதை டிஜிட்டல் திருடர்கள் சொல்லுகிறார்கள்...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-நவ-202015:33:59 IST Report Abuse
Dr. Suriyaவிஞ்ஞான ஊழலுக்கு முட்டுக்கொடுப்பதை பாருங்களேன்.........
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
18-நவ-202018:35:13 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்குன்ஹா தீர்ப்பை படி .BC quota வில் அரசு செலவில் கிளிச்ச compounder எச்...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
19-நவ-202011:53:16 IST Report Abuse
Dr. Suriyaமரியாதையை சொல்லி தரலையா இந்த சொரியான் கூட்டம் ..... உங்களை குற்றம் சொன்னால் ஒடனே குலுக்க பட்டர் என்று தனிமனித தாக்குதல்... இதுதான் பாசறை சொல்லி தந்த பகுத்தறிவோ... மரியாதையை இல்லை என்றால் எனக்கும் இது போல் கருத்து எழுதமுடியும் .........
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
19-நவ-202013:43:51 IST Report Abuse
Dr. Suriyaநீ மொதல்ல சர்க்காரியா கமிசன் கொடுத்த அறிக்கையை படி.....அரசு செலவில் SC கோட்டாவில் படித்தாயா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X