புதுடில்லி: 'கமிஷன் இன்றி ஒப்பந்தங்கள் இல்லை என்பதை, காங்கிரஸ் தலைவர்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர்' என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்ததலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பயணம் செய்ய, நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க, 2010ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுஒப்பந்தம் போடப்பட்டது. இதில், பெரும் ஊழல் நடந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

சி.பி.ஐ., விசாரணைக்கு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். ஆனால், விசாரணை மந்தமாக நடந்தது.கடந்த, 2014ல், தே.ஜ., கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், முக்கிய குற்றவாளி ராஜிவ் சக்சேனா கைது செய்யப்பட்டார். இவர், காங்., மூத்த தலைவர்கள், சல்மான் குர்ஷித், அகமது படேல் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் பகுல்நாத் மற்றும் உறவினர் ரதுல் புரி ஆகியோரது பெயர்களை விசாரணையில் குறிப்பிட்டு உள்ளார்.
கமிஷன் இன்றி ஒப்பந்தங்கள் இல்லை என்பதை, காங்., தலைவர்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர். எந்த ராணுவ ஊழல் வழக்கை எடுத்துக் கொண்டாலும், அதில் காங்., தலைவர்கள் பெயர் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE