பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.252 பிரீமியம் செலுத்தினால்ஏக்கருக்கு ரூ.16,600 பெறலாம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில்நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.252 பிரீமியம் செலுத்தினால் ஏக்கருக்கு ரூ.16,600 இழப்பீட்டு தொகை பெறலாம். ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு ஆண்டு செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு ஆணை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில்நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.252 பிரீமியம் செலுத்தினால் ஏக்கருக்கு ரூ.16,600 இழப்பீட்டு தொகை பெறலாம்.

ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு ஆண்டு செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் நெல்சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பதிவு செய்யலாம். ரூ.252 பிரீமியம் செலுத்தினால் ஏக்கருக்கு ரூ.16,600 இழப்பீட்டு தொகை பெறலாம். காப்பீடு செய்ய நவ.,30 கடைசிநாளாகும்.

விண்ணப்படிவம், உறுதிமொழி படிவம், ஆதார் அட்டைநகல், வி.ஏ.ஓ., வழங்கிய நெற்பயிர் சாகுபடி அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க ஆகிய ஆவணங்களுடன் வணிக வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களில் பதிவு செய்யலாம். பயிர் விதைக்க இயலாமை, முளைப்புத்திறன் பாதிப்பு, வறட்சி, வெள்ளம் போன்ற பாதகமான சூழ்நிலைகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெற வாய்ப்புள்ளது,' .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X