இடுக்கி : கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டிற்கு வந்தது.
இம்மாவட்டத்தில் டிச.8 ல் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள்மும்முரமாக நடந்து வருகின்றது. தேர்தல் தொடர்பான பணிகளை முறைபடுத்துதல், புகார்கள், மனுக்கள், தகவல்களை முறையாக பதிவு செய்தல்,கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றடைவதை உறுதி படுத்துதல்,இ.மெயில் தகவல்களை சோதித்தல் ஆகியவற்றிக்காக கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டிற்கு வந்தது.பைனாவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் மற்றும் மக்கள் தொடர்புதுறை அலுவலகத்தில் செயல்படும் இதனை கலெக்டர் தினேசன் துவக்கி வைத்தார்.
காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும். அதில் 04862 -232400, 94963 28171 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதுடன் புகார்களும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.-----818 வேட்பு மனுக்கள் தாக்கல்நேற்று ஊராட்சிகளில் 714, ஊராட்சி ஒன்றியங்களில் 47, மாவட்ட ஊராட்சியில் 5, கட்டப்பனை நகராட்சியில் 28, தொடுபுழா நகராட்சியில் 24 என 818 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை1,098 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாளாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE