சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுயானைகளால் தென்னை, வீடுகள் சேதம்

Added : நவ 18, 2020
Share
Advertisement
தேவாரம் : கோம்பை சுரத்மெட்டு அடிவாரம் கோட்டமலை பகுதி தோட்ட தென்னை மரங்கள், வீட்டின் மேற்கூரைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இங்கு கோட்டமலை பகுதியில் இரண்டு நாட்களாக இரண்டு யானைகள் நடமாட்டம் இருந்தது. இப்பகுதியில் தென்னந்தோப்பு வைத்திருப்பவர் பவுன். இவரது தோப்பில் இருந்த 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், வீட்டின் மேல் போடப்பட்டிருந்த தகர மேற்கூரை, நுழைவு வாயில்

தேவாரம் : கோம்பை சுரத்மெட்டு அடிவாரம் கோட்டமலை பகுதி தோட்ட தென்னை மரங்கள், வீட்டின் மேற்கூரைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

இங்கு கோட்டமலை பகுதியில் இரண்டு நாட்களாக இரண்டு யானைகள் நடமாட்டம் இருந்தது. இப்பகுதியில் தென்னந்தோப்பு வைத்திருப்பவர் பவுன். இவரது தோப்பில் இருந்த 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், வீட்டின் மேல் போடப்பட்டிருந்த தகர மேற்கூரை, நுழைவு வாயில் கேட் முழுவதும் நேற்று முன்தினம் இரவு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. உத்தமபாளையம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதுபோல தேவாரம் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றையானை விளைநிலங்களை சேதப்படுத்துவது மட்டுமில்லாமல் அது தாக்கி இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நிம்மதி இழந்து தவிக்கும் தேவாரம், கோம்பை விவசாயிகள் இதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X