ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீர, தீர செயல் புரிந்த பொது மக்கள், அரசு அலுவலர்கள் அண்ணா பதக்கம் பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.
உயிரை காப்பாற்றுதல், அரசு பொது சொத்துக்களை காப்பாற்றுதல் ஆகிய துணிச்சலான செயல்களை புரிந்த பொதுமக்கள், அரசு பணியாளர்களுக்கு 2021 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் முதலமைச்சர் பழனிச்சாமி மூலம் அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீயணைப்புதுறை, மீட்புத்துறை, ராணுவத்தினர் விண்ணப்பிக்க இயலாது. பிறதுறையினர், தகுதிவாய்ந்தவர்கள் htt://awards.tn.gov.in/ என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது நாளைக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE