பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் பயிர் காப்பீடுசெய்ய நவ.30 கடைசி நாள்

Added : நவ 18, 2020
Share
Advertisement
சிவகங்கை : விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவ.30க்கு முன்னதாக காப்பீடு செய்து பயன் பெறலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:மத்திய அரசு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அங்கீகரித்தபடி 80:20 பகிர்மான அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய இணைப்பு

சிவகங்கை : விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவ.30க்கு முன்னதாக காப்பீடு செய்து பயன் பெறலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:மத்திய அரசு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அங்கீகரித்தபடி 80:20 பகிர்மான அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய இணைப்பு காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தற்போது சிவகங்கை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு, நடவு பணிகள் நடந்து வருகிறது.

கடைசி நேரத்தில் நெருக்கடியை தவிர்க்க விவசாயிகள் பயிர் காப்பீட்டினை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களில் நவ.,30க்கு முன்னர் உரிய ஆவணங்களுடன் சென்று பயிர்காப்பீடு கட்டணத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X