சிவகங்கை : சிவகங்கை ஊர்க்காவல் படைக்கான தேர்வு நவ.,25 அன்று ஆயுதப்படை மைதானத்தில் காலை 7:00 மணிக்கு நடக்கும் என எஸ்.பி., ரோஹித்நாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: காலியாக உள்ள 43 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான எழுத்து தேர்வு முதலில் நவ.,29 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு நவ.,25 அன்று காலை 7:00 மணிக்கு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தவறாமல் உரிய சான்றுடன் பங்கேற்கவும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE