சிவகங்கை : ''ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:அலைபேசியில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை மக்கள் தங்களின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்துகின்றனர். சிலரின் அதீத ஆசையால், திரைப்படங்களை பார்த்து உடனே பொருளாதார வளர்ச்சி காணும் ஆசையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக தற்கொலை நடக்கின்றன. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அலைபேசி கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கில் உள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை எப்படி கையாள்கிறார்கள் என கவனிக்க மறந்து விடுகின்றனர்.
யார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டாலும் இழப்பு குடும்பத்திற்கு தான். மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும் மக்கள் அலைபேசியில் ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE