திண்டுக்கல் : முதல்வர் பழனிசாமிக்கு, திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் கிருபாகரன் தலைமையில் கடிதம் அனுப்பினர்.
அதில் கூறியிருப்பது: விருதுநகரில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் எனும் அறிவிப்புக்கு வாழ்த்துகள். தமிழக வணிகர் நல வாரியம் துவங்கி பல ஆண்டுகளாகிறது. இவ்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நிதி வங்கியில் உள்ளது. இருந்தும் வணிகர்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை. நலிந்த வணிகர்களுக்கு மருத்துவம், கல்வி, விபத்து, மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி குறைகளை கேட்டும், நலிந்த வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வணிக வரி அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாததால் நியாயமான சலுகைகளும் கிடைக்கவில்லை. வணிகர்களுக்கு பயன்படும் வகையில் நலவாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு போல் மாநில அளவில் வணிகர்களை உறுப்பினர்களாக்கி நல வாரியம் அமைக்க வேண்டும் என, கூறியிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE