கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிராம ஊராட்சிகளில் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். எட்டுமாத காலத்தில் கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் மழைக்காலம் துவங்கிவிட்டது.பொதுமக்கள் வசிப்பிடங்கள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஊராட்சி செயலர்கள் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். நீர்தேக்க தொட்டிகளை குளோரினேசன் செய்திட வேண்டும். சுகாதாரத்துறையினர் களப்பணிகள் செய்து காய்ச்சல் கண்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும், என அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சிவகங்கை முத்துக்கழுவன், தேவகோட்டை சுரேந்திரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE