திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மழை பெய்ததால் குளமாக மாறிய தற்காலிக காய்கறி மார்கெட்டில் சேற்றிலும், சகதியிலும் நின்று வியாபாரம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் காந்தி மார்கெட் சீரமைப்பு பணிகள் நடப்பதால் தற்காலிகமாக பல இடங்களுக்கு மாற்றப்பட்டு இறுதியாக நேருஜி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால், அப்பகுதியில் தண்ணீர் பெருகி குளமாக மாறிவிட்டது. சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.அதற்குள் நின்றபடிதான் வியாபாரம் செய்கின்றனர். இவ்வாறு மழைநீர் தேங்குவது நோய் பரவலுக்கு வழி வகுக்கும். தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது .தற்போது மழைக்காலம் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய மார்கெட் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்* நடவடிக்கை தேவைவியாபாரி செல்வராஜ் கூறியதாவது : சிறு மழை பெய்தால் குட்டை போல் மழைநீர் தேங்கி விடுகிறது. காய்கறிகள் வீணாகிறது. சேற்றில் நின்று வியாபாரம் செய்கிறோம். பழைய இடம் அல்லது வேறு ஏதாவது பகுதிக்கு மாற்றம் செய்து கொடுக்க வேண்டும், என்றார்.
மாற்று இடம் தேவைமெஷராஜ் கூறுகையில் : சின்னாளபட்டியிலிருந்து காய்கறிகள் வாங்க வந்தோம். இங்கு மழைநீர் தேங்கியிருப்பதால் சிரமமாக உள்ளது. நீர் வடிந்தால் முழுவதும் சேறாகி, நடக்க முடியாமல் போகிறது. மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE