சிங்கம்புணரி : நடந்து முடிந்த நீட் தேர்வில் புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சின்னநம்பிக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கான சீட் உறுதியாகியுள்ளது.
மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான எஸ்.புதுார் ஒன்றியம் பிரான்பட்டியை சேர்ந்த இவர் புழுதிப்பட்டி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி 124 மதிப்பெண்களை பெற்றார். மருத்துவகல்லுாரியில் சேர இடம் கிடைக்காத நிலையில் இந்தாண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி 448 மதிப்பெண் பெற்றார்.தமிழக அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இவருக்கு மருத்துவக்கல்லுாரியில் சேர இடம் கிடைத்துஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE